வியாழன், 24 மார்ச், 2011

விகடனின் குடிமகன்.


விகடனில் வெளியான ,
கவிஞர் காப்பிராயன்
கவிதை.



தேர்தல் அறிக்கை படிச்சதுமே
தெம்பு கூடுது...
டாஸ்மாக்கில் டபுள் மடங்கா
சேல்ஸு ஏறுது!


இலவசமா எல்லாமே
இனிமே கெடைக்குண்டா...
எதுக்கு வேல பாக்கணும் நீ
ரிஸைன் பண்ணுடா!


கிரைண்டர் மிக்சி நம்மளுக்கு
அரைக்கத் தர்றாங்க...
ஸ்பெக்ட்ரத்தை மாவில் போட்டு
மறைக்க வர்றாங்க!


இலவசமா அரிசி கூட
கெடைக்கப் போவுதாம்...
வேகவைக்க கேஸ் அடுப்பும்
ஜோடி சேருதாம்!


அறுபது வயசு ஆகலையேன்னு
கவலை பொறக்குது...
ஓசி பஸ்ல போக முடியாது
என்ன பண்றது?


காலேஜுல சேரலாம்னா
நாப்பது வயசுடா...
லேப்டாப்பு கெடைக்காது
ரொம்ப லாஸுடா!


மென்டல் ஆஸ்பத்திரி மதுரையில
தெறக்கப் போறாங்க...
தோக்கறவங்க அதுல வந்து
படுக்கப் போறாங்க!


தேவையெல்லாம் ஃபிரியாவே
குடுக்கப் போறாராம்...
ஐயா எப்படி இந்தக் கடனை
அடைக்கப் போறாராம்?


இலவசத்தில் ஒண்ணு ரெண்ட
ஸ்டாப் பண்ணுங்கப்பா...
நாங்களும் கொஞ்சம் வாங்கிக்கிறோம்
வேல குடுங்கப்பா!


நன்றி: விகடன் 

ஞாயிறு, 20 மார்ச், 2011

தேர்தல் கேலிச் சித்திரங்கள்.

"எனது பிரச்சினையே பெரும் பிரச்சினையாக இருக்கிறது,எதில் எதற்கு,அடுத்தவர் பிரச்சினை."


"இந்தக் கோட்டையில் இருப்பவர்களுக்கு, அறிவு ஜாஸ்தியாகப் போய்விட்டது,
நான் எதைச் சொன்னாலும்,அதற்கு விளக்கம் கேட்கிறார்கள்,நாம் வேறு இடம் பார்ப்பதுதான் சாலச் சிறந்தது."


"எப்படிச்  சுற்றினாலும்,சரியான இடத்துக்குப் போய்ச் சேர முடியலையே."


"இந்திய அரசாங்கத்திற்கும், தமிழ் மக்களுக்கும்,எவ்வளவு அழகாகக் கணக்குக்
காட்டியுள்ளேன்,இவருக்குக் காட்டுவதா பெரிய வேலை."


 " நம்மபேர் இருந்தாலும்,நாம வெள்ளச் சட்டை,வெள்ள 
வேட்டி கட்டுனா,நாமும் தலைவர்போலத் தான் தெரிவம்."
"என்ன இப்படியே விட்டிங்கன்னா,நீங்க இருக்குமிடத்திற்கே எல்லாம் இலவசமாகக் கிடைக்க,ஏற்பாடு பன்னிருவன்."

வெள்ளி, 18 மார்ச், 2011

பூமியை நெருங்கும் சந்திரன்.





பூமியை நெருங்கி வரும் சந்திரனால்,பூமிக்கு ஆபத்தா? விஞ்ஞானிகள்
கூற்றுப்படி எந்தவிதமான ஆபத்தும் இல்லை,இது ஒரு சாதாரண நிகழ்வு என்றும்,இதனால் பூமியில் எந்த விதமான,தாக்கங்களும் நிகழாது என்றும்
தெரிவிக்கிறார்கள்.

அஞ்ஞானிகள், இது ஒரு அபூர்வமான நிகழ்வு என்றும், இதன் தாக்கம்,
பூமியில் எங்காவது பிரதிபலிக்கும் என்றும்,ஜப்பானில் நடந்தது, இதன்
ஆரம்பம் என்றும், மக்களைப் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

என்னதான் நடக்கும்? இனிமேல்தான் தெரியும், பொறுத்திருந்து பார்ப்போம்.
இன்றுதான்,அந்த நாள்,19ந் திகதி, சனிக்கிழமை, பௌர்ணமித் தினம்.இது சம்பந்தமாகத் தெரிந்தவர்கள்,சொல்லுங்கள் கேட்போம்.